தேசம்

img

உங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுகிறோம்... தில்லி சமூகப்பணி கல்லூரி மாணவர்கள் கண்டனம்

புதுதில்லி:
தில்லி வன்முறைக்கு காரணமானவர்களில் பாஜக தலைவர் கபில்மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபே வர்மா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்களில், சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறியதுடன், முஸ்லிம்களைத் தானே களத்தில் இறங்கி விரட்டியடிப்பேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தவர் கபில் மிஸ்ரா. அதன் விளைவுதான் தற்போது தில்லியில் அரங்கேறிய வன்முறையும் உயிர்ப்பலிகளும்.

இந்நிலையில், கபில் மிஸ்ரா படித்துப் பட்டம் பெற்ற, தில்லி சமூகப்பணி கல்லூரி (Delhi School ofSocial work) என்ற நிறுவனத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தினர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:“தில்லி சமூகப்பணி கல்லூரி மாணவர்கள், 1947 பிரிவினையின்போதும், 1984-இல் சீக்கியருக்கு எதிரான வன்முறையின்போதும், மக்கள் ஒற்றுமைக்காக பங்காற்றியவர்கள். 1946 முதல் இன்றுவரை ஏராளமான சமூகப்பணியாளர்களையும், கல்வியாளர் களையும் இந்த கல்லூரி வழங்கியுள்ளது.

இவ்வாறான பெருமைகள் ஒருபுறமிருக்க, பாஜக தலைவர் கபில் மிஸ்ராபோன்ற மாணவர்களும் இதே கல்லூரியில் பயின்றுள்ளனர் என்பது வேதனை.கபில் மிஸ்ரா உரையால் கடந்த 3 நாட்களாக தில்லியில் வகுப்புவாத வன்முறை ஏற்பட்டு, பலர் மரணம் அடைந் துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.இதற்காக, கபில் மிஸ்ரா இந்தக்கல்லூரியில் படித்தவர் என சொல்வதில் வெட்கப்படுகிறோம். கபில் மிஸ்ராவின் செயலால், எங்கள் கல்லூரியின் நற்பெயர், சமூகப் பணிகள் பாழாகி உள்ளன. தில்லி காவல்துறை கபில் மிஸ்ராவைக் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”இவ்வாறு அவர்கள் கூறியுள்ளன.

;