தேசம்

img

தில்லியில் அமையும் ‘பணக்கார’ சட்டமன்றம்... 52 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள்

புதுதில்லி:
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில், இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மிக அதிகமான கோடீஸ் வரர்கள் எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 2015 தேர்தலில் 44கோடீஸ்வரர்கள் வெற்றி பெற்றிருந்தனர். 020 தேர்தலில் இந்த எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2015-இல் ரூ.6 கோடியே30 லட்சமாக இருந்த, தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பும், 2020-இல் ரூ.14 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது.

மீண்டும் தேர்வான எம்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பு, 2015-இல்ரூ. 7 கோடியே 90 லட்சமாக இருந்தது. 2020-இல் 45 எம்எல்ஏ-க்கள்மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில், அவர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ. 8 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது.தில்லி சட்டப்பேரவையின் கோடீஸ்வர எம்எல்ஏ-க்கள் பட்டியலில், முதல் ஐந்து இடங்களையும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தரம்பால் லக்ரா (ரூ. 292 கோடியே 10 லட்சம்), பர்மிலாதோகாஸ் (ரூ.80 கோடியே 80 லட்சம்), ராஜ் குமார் ஆனந்த் (ரூ.76 கோடி), தன்வந்தி சந்தேலா(ரூ.56 கோடியே 90 லட்சம்), நரேஷ் பல்யான் (ரூ.56 கோடியே 30 லட்சம்) ஆகியோரே கைப்பற்றியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சிசார்பில் வெற்றி பெற்றுள்ள 62 எம்எல்ஏ-க்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ. 14 கோடியே 96 லட்சமாக உள்ளது.தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீரமைப்புக் கான கூட்டமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

;