தேசம்

img

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனாம் - பியூஸ்கோயல் புதிய கண்டுபிடிப்பு 

பொருளாதாரம் மந்தநிலை குறித்து பேசிய மத்திய வணிகத்துறை அமைச்சர் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீன் என்று தெரிவித்துள்ளார். 

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர்.  ஆட்டோமொபைல் தொழிற்துறையில் ஏற்பட்ட மந்தநிலைக்குக் காரணம் ஓலா, ஊபர் சேவைகள் தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார்.  அவரது கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் ஜிடிபி கணக்கு பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, ஐன்ஸ்டீனுக்கும் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க கணிதம் உதவவில்லை என்று மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வர்த்தக வாரிய கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல் 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உயர்வடைவதன் பாதையில்தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.  “தொலைக்காட்சியில் காட்டப்படும் அந்த கணக்கீடுகள் வழியில் செல்ல வேண்டியதில்லை, அதாவது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் 12% பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கணக்கீடுகளை நாம் பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய ஜிடிபி கணக்குகளைப் பார்க்க வேண்டாம். இத்தகைய கணிதங்கள் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவவில்லை.
அவர் ஒரு அமைப்பாக்கம் செய்யப்பட்ட சூத்திரத்தின் மூலமும் கடந்தகால அறிவின் அடிப்படையிலும் சென்றிருந்தாரேயானால் உலகில் புதிய விஷயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன்” என்றார் பியூஷ் கோயல்.
புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் நியூட்டன் என்ற நிலையில் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை  திசைதிருப்பும் வகையில் பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து இதுபோல் பேசி வருகின்றனர். 
 

;