தேசம்

img

மனைவி மீது தாக்குதல் ... தில்லி பாஜக தலைவரின் வெறித்தனம்

புதுதில்லி:
தில்லி மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர், ஆசாத் சிங். இவருடைய மனைவி சரிதா சவுத்ரி. இருவருமே பாஜக-வில் இருப்பவர்கள் என்பதுடன், சரிதா சவுத்ரி தெற்கு தில்லியின் முன்னாள் மேயரும் ஆவார். ஆனால், அண்மைக் காலமாக இவர்கள் இரு வருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்ததாகவும், சரியாக பேசிக்கொள்வது இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், மனைவி சரிதா சவுத்ரியை, தில்லி பாஜக அலுவலகத்தில் பார்த்ததும், ஆசாத் சிங் ஆத்திரமடைந்துள்ளார். மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே சரிதா சவுத்ரி மீது பாய்ந்து, அவரது கன்னத்தில் கடுமையாக அறைந்துள்ளார். பாஜக-வினர் பலரும் சுற்றியிருக்கும் போதே, தனது மனைவி  மீது வெறித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளார். இது பாஜக அலுவலகத்திலிருந்த கண்காணிப்புக் கேமிராவிலும் பதிவாகியுள்ளது. பாஜக தலைவர் ஒருவர், பாஜக அலுவலகத்திலேயே அவரது மனைவியை அடித்து உதைத்த சம்பவம் தில்லி ஊடகங்களில் பரபரப்புச்செய்தியாக வெளியாகியுள்ளது.

;