தேசம்

img

பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புதுப்பித்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

புதுதில்லி, ஜூலை 25-

பிஎஸ்என்என் நிறுவனத்தைப் புதுப்பித்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது இன்று (வியாழக்கிழமை) பி.ஆர். நடராஜன், பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிப்பதற்காக அமைச்சரவைக்குழு உட்பட பல்வேறு குழுக்கள் அளித்திட்ட பரிந்துரைகளின் விவரங்கள் என்ன என்றும், அவற்றின் மீது அரசாங்கம் இறுதி முடிவு ஏதாவது எடுத்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல் நிறுவனங்களின் பிரச்சனைகளை ஆரய்ந்து, புதுப்பித்து, புத்தெழுச்சி ஏற்படுத்திட, 2013 ஏப்ரலில் அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது என்றும்,  அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவை

(1)    பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான டவர்களை அதற்கு முற்றிலும் உடைமையாகவுள்ள துணை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திட வேண்டும் என்கிற முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.

2017 செப்டம்பரில் பிஎஸ்என்எல் “தொடக்கநிலையில் நலிவுற்றிருப்பதாக” (“Incipient Sick”), டெலிகாம் துறையால் பிரகடனம் செய்யப்பட்டது. அதனையொட்டி, டெலிகாம் துறையால் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புதுப்பித்திடவும் புத்தெழுச்சி ஏற்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்குமாறு அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஸ்மெண்ட் பணிக்கப் பட்டிருக்கிறது.

அதன் பரிந்துரை மற்றும் பிஎஸ்என்எல் வாரியத்தால் ஒப்புதல் ஆகியவற்றை அனுசரித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்காக ஓர் ஒருங்கிணைந்த புதுப்பித்தல் திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

(ந.நி.)

 

 

 

 

 

 

 

;