தேசம்

img

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுத்திடுக.... பாஜக எம்.பி., காம்பீர் வலியுறுத்தல்

புதுதில்லி:
தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில்மிஸ்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று  அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கௌதம் காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ)எதிராக  போராட்டம் நடத்தியவர்கள் மீது அச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர்உயிரிழந்துள்ளனர். ஜாஃபர்பாத் பகுதியில் உள்ள மௌஜ்பூர் சௌக்கில் சிஏஏ-வுக்கு ஆதரவான குழுவினரை கபில் மிஸ்ராவே கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிநடத்தினார். இதன்பிறகே தாக்குதல் நடைபெற்றது.பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா தில்லி காவல் துறையினருக்கு கெடு விதிக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், ஜாப்ராபாத் மற்றும் சந்த் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தில்லி காவல் துறையினருக்கு மூன்று நாள் வழங்கப்படுகிறது. இதன்பிறகும், காரணம் கூறிநியாயப்படுத்த முயற்சிக்காதீர், நாங்கள் செவிசாய்க்க மாட்டோம். காவல் துறையினர் சொல்வதைக்கூட கேட்கமாட்டோம். நாங்கள் சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம் என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் பாஜகவின் கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினர் கௌதம்காம்பீர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், கபில் மிஸ்ராவாகட்டும், வேறு யாராகவோ இருக்கட் டும், எந்தக் கட்சியை வேண்டுமானாலும் சேர்ந்தவராக இருக்கட்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது யாராக இருந்தாலும் சரி, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று தெரிவித்தார்.

;