தேசம்

img

சாமியார், குருக்கள் வேடத்தில் உலாவும் பாக். உளவாளிகள்

புதுதில்லி:
இந்திய ராணுவத்தில் பணி புரியும் முக்கிய நபர்களிடம் இருந்து தகவல்களை திருடுவதற்காக, பாகிஸ்தான் உளவுத்துறையினர், சாமியார்கள் வேடத்தில் உலவுவதாகவும், அவர்கள் சாமியார்கள், குருக்கள் போன்று சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய உளவுத்துறையானது, கடந்த அக்டோபர் மாதத்தில் ராணுவத்தில் பணிபுரியும் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “பாகிஸ்தான் உளவுத்துறையில் இருக்கும் நபர்கள், முகநூல், ட்விட்டர், வாட்ஸ்ஆப், டிக்டாக், டெலிக்ராம், ஸ்கைப், யூ.டியூப்போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் போலி கணக்குகளில் செயல்பட்டு வருகின்றனர். பாபாக்கள் போலவும், குருவாகவும் நடித்து இந்திய ராணுவத்தினரின் நம்பிக்கையை பெற முயற்சி செய்து வருகின்றனர். ராணுவத்தினரின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் போன்ற வீடியோ சாட்டிலும் பேசி மிக முக்கியத் தகவல் களை அவர்கள் ராணுவத்தினரிடம் கறக்க முற்படுகின்றனர்” என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.இதுவரை 150-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் உளவுத்துறையினர், போலிக் கணக்குகள் வைத்து சமூக வலைதளங்களில் உலவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;