தேசம்

img

சேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி

புதுதில்லி:
தில்லி போலீசார் ஏற்படுத்திய சேதங்களுக்கு, மத்திய அரசு ரூ. 2 கோடியே 66 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர்15-ஆம் தேதி தில்லி ஜாமியா மிலியாஇஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தில்லி போலீசார், பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறிப் புகுந்து, மாணவர்களைத் தாக்கினர். அத்துடன், பல்கலைக்கழகத்திலுள்ள வகுப்பறை, நூலகம், ஜன்னல், நாற்காலிகள், கண்ணாடிக் கதவுகள்,மேஜைகள், சிசிடிவி-க்கள் ஒன்றுவிடாமல் அடித்து நொறுக்கினர்.இந்நிலையில், தில்லி போலீசார் பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக, மத்திய அரசு ரூ. 2 கோடியே 66 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஜாமியாமிலியா பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.தில்லி போலீசாரால் தாக்குதலுக்கு உள்ளான முதுகலை மாணவர் முகமது முஸ்தபா என்பவரும், ரூ. 1 கோடிஇழப்பீடு கேட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

;