தேசம்

img

டாக்டர் ஜாகீர் உசேன் நூலகம் புதுப்பொலிவுடன் திறப்பு.. ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் மகிழ்ச்சி

புதுதில்லி:
தில்லி காவல்துறை மற்றும் சங்-பரிவாரங்களின் கும்பல் வன்முறையால் அடித்து நொறுக்கப்பட்ட ஜாமியாமிலியா பல்கலைக்கழக நூலகம்புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவோடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்த மசோதாநிறைவேற்றப்பட்டதற்கு எதிராக தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர்15-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினரும், சங்-பரிவாரங்களும் ஜாமியாமிலியா பல்கலைக்கழகத்திற் குள் அத்துமீறி நுழைந்து வன் முறை வெறியாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக நூலகத்தைக்கூட அவர்கள் விட்டு வைக்காமல் சூறையாடினர்.நூலகத்திற்குள் படித்துக் கொண்டிருந்த மாணவர்களும் வெறியாட்டத்திற்குத் தப்பவில்லை. அதுதொடர்பான வீடியோக்களும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்புக்கு ஏற்படுத்தியது.

இதனிடையே, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜாகீர் உசேன் நூலகம் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் 3 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும்புதன்கிழமையன்று செயல்பாட் டுக்கு வந்துள்ளது.800 மாணவர்களை அமர வைக்கும் திறன் மற்றும் ஒரு வாசிப்புமண்டபம், ஆராய்ச்சி தளம், 150 கணினிகளைக் கொண்ட டிஜிட்டல்வள மையம் ஆகியவற்றை உள்ளடக்கியது, டாக்டர் ஜாகீர் உசேன்நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

;