தேசம்

img

இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது - மோடியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஒப்புதல்

நாட்டில் பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது என்று மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் உள்ள ஷமிகாரவி தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் ஆட்டோ மொபைல் உள்ளிட்ட தொழில் துறை கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. குறிப்பாக ரூ.5 பிஸ்கெட் விற்பனையில் கூட  மந்தம் ஏற்பட்டுள்ளது எனவே சுமார் 10000 தொழிலாளர்கள் வேலையிழக்க உள்ளனர் என்று பார்லிஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து பாஜக தலைவர்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்ற தெரிவித்து வந்தனர். 
இந்நிலையில் இந்திய பொருளாதாரம்  தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றுள்ள ஷமிகா ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் நமது பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து தேசிய அளவில் வளர்ச்சி திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சி நிதி அமைச்சகத்திடம் மட்டும் விடுவது நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்குத் துறையின் கையில் விடுவது போல இருக்கும் என தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் இந்தியா உள்ளது என நிதிஆயோக் துணை தலைவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;