தேசம்

img

வேளாண்மை, ஊரக வளர்ச்சி, எரிசக்தி, சுகாதாரம், அனைத்திலும் ‘கை’ வைத்த மோடி அரசு...முக்கியத் திட்டங்களுக்கான நிதி வெட்டிக் குறைப்பு

புதுதில்லி:
2020-21 நிதியாண்டிற்கான பட் ஜெட்டை மத்திய பாஜக அரசு, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில், முக்கியத் திட்டங்கள் பலவற்றுக்கான நிதியைபெருமளவிற்கு வெட்டிச் சுருக்கியுள்ளது.குறிப்பாக, தனது சாதனைத் திட்டங்கள் என்று பிரதமர் மோடி கூறிக்கொள் ளும் ‘தூய்மை இந்தியா’ திட்டம், ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ (சுகாதாரக் காப்பீடு), ‘தேசிய கங்கா திட்டம்’, ‘விவசாயிகளுக்கு உதவித்தொகை அளிக்கும்திட்டம்’ ஆகியவற்றுக்கு கூட, 2019-20 நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதை விடவும், தற்போது நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துள் ளது.உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் என்று மோடி அரசு கூறிவந்த ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துக்கு, நடப்பு 2019-20 நிதியாண்டில் ரூ. 6 ஆயிரத்து 556 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2020-21 நிதியாண்டில், சரிபாதி தொகை வெட்டப் பட்டு, ரூ. 3 ஆயிரத்து 314 கோடி மட்டுமேஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கும் திட்டமே ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ என்றும்,இதன்மூலம் 10.74 கோடி ஏழைக் குடும்பங்களும், 50 கோடி மக்களும் பயன்பெறுகிறார்கள் என்றும் மோடி அரசு தம்பட்டம்அடிக்கும் ஒரு திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடே ரூ. 3 ஆயிரத்து 314 கோடியாக சுருங்கி விட்டது.பிரதமர் மோடியின் மற்றொரு முக்கியமான திட்டம், கங்கை நதியைத் தூய்மையாக்கும், தேசிய கங்கா திட்டமாகும்.இந்தத் திட்டத்துக்கு 2019-20இல் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அது தற்போது ரூ. 353 கோடியாகவெட்டப்பட்டுள்ளது.

அதேபோல மோடியை பிரபலப் படுத்தியதில், தூய்மை இந்தியா திட்டமும் ஒன்றாகும். திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை ஒழிப்பது, சுகாதாரம், சுத்தம் ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த திட்டத்தை 2014 அக்டோபர் 2-இல் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ. 12 ஆயிரத்து 644 கோடி இந்த திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,2020-21 நிதியாண்டிற்கு இது ரூ. 9 ஆயிரத்து 638 கோடியாகக் குறைக்கப்பட்டுள் ளது.விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் விகிதம் 3 தவணையாக மொத்தம் ஒரு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான்’ திட்டத்துக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. 2019-20 பட்ஜெட்டில் ரூ. 75 ஆயிரம் கோடி அளவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடு, 2020-21 நிதியாண்டிற்கு ரூ. 54 ஆயிரத்து 370 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.இவை தவிர, எரிசக்தித் துறைக்கு கடந்த பட்ஜெட்டில் 44 ஆயிரத்து 638 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது அது 42 ஆயிரத்து 725 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, 1 லட்சத்து 40 ஆயிரத்து 762 கோடியிலிருந்து 1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடந்த முறை 29 ஆயிரத்து 164 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை அது28 ஆயிரத்து 600 கோடியாக குறைக்கப் பட்டுள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக, மானியங்களுக்காக கடந்த பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது 2 லட்சத்து 27 ஆயிரத்து 794 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

;