தேசம்

img

புகைப்படம் எடுப்பதை விடுங்கள்; பொருளாதாரத்தை கவனியுங்கள்

புதுதில்லி:
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட் டுள்ள, அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.“இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக செயல்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன். அரசாங்க முயற்சிகளில் ஏதோதவறு உள்ளது என்பதை நிச்சயம்அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில், பொருளாதார பின்தங்கிய நிலை மிக வேகமாக கடுமையாகி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் அபிஜித் பானர்ஜியின் கருத்தை மேற் கோள் காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். “நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவு வேகமாக பின் நோக்கி செல்கிறது? என்பது எங்களுக்குத் தெரியாது, தரவு பற்றி சர்ச்சைகள் உள்ளன. ஆனால் அது வேகமாக பின்நோக்கி செல்கிறது என்பது மட்டும் உண்மை” என்று கூறியுள்ள கபில் சிபல், “பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த புகைப்படங்கள் எடுப்பதைக் குறைத்துக்கொண்டு நாட்டின் மீது கவனம் செலுத்தினால் நல்லது” என்றும் கிண்டலடித்துள்ளார்.

;