தேசம்

img

ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் உடல்நிலையைக் காரணம் காட்டி தில்லி உயர்நீதிமன்றத்தில்  இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி ப.சிதம்பரம் மனுத் தாக்கல்  செய்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு கொசுவலை கொடுக்கவும், வாரம் ஒருமுறைமருத்துவ பரிசோதனை செய்யவும், மாஸ்க் வழங்கவும் புறநோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும். சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;