தேசம்

img

மெகுல் சோக்ஸிக்கு குடியுரிமை வழங்க இந்திய அதிகாரிகளே காரணம்!

புதுதில்லி:
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரவ் மோடி. வைர வியாபாரியான இவர், பஞ்சாப் நேசனல் வங்கியில் சுமார் ரூ. 13 ஆயிரத்து 578 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்குத் தப்பினார். இந்த மோசடியில் நீரவ் மோடிக்கு உடந்தையாக இருந்த,அவரது மாமன் மெகுல் சோக்ஸியும் நாட்டை விட்டு தப்பினார்.

கடந்த 2018 ஜனவரி 15-இல் இந்தியாவை விட்டு வெளியேறிய சோக்ஸி, ஆண்டிகுவா - பார்படாஸ் நாட்டில் அடைக்கலம் புகுந்தார். முதல் வேலையாக அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அவர், தனது இந்தியக்குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டை ஆண்டிகுவா நாட்டிடம் ஒப்படைத்தார்.இதனிடையே, சோக்ஸியை இந்தியா கொண்டுவர சிபிஐ முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அதுபற்றி ஆண்டிகுவா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக சாதகமான பதிலை அளித்துள்ள காஸ்டன் பிரவுன், அதேநேரம், “இந்திய அதிகாரிகளின் பேச்சை நம்பித்தான் மெகுல் சோக்ஸிக் எங்கள்நாட்டில் குடியுரிமை வழங்கினோம்;  ஆனால், அவர் ஒரு வஞ்சகர் என்று இப்போதுதான் தெரிவிக்கப்படுகிறது; எனவே, நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் இந்திய அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.“சோக்ஸியை இந்தியாவை விட்டு வெளியேற அனுமதித்ததும் இந்திய அதிகாரிகள்தானே” என்றும் காஸ்டன் பிரவுன் சுட்டிக் காட்டியுள்ளார்.

;