திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தேசம்

img

ஐசிஎம்ஆர் அறிவிப்பு ஆபத்தானது... அதிர்ச்சியில் அறிவியல் உலகம்

புதுதில்லி:
ஆகஸ்ட் 15 க்குள் கோவிட் தடுப்பூசி வெளியிடப்படும் என்ற ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு ஆபத்தானது மற்றும் நம்பத்தகாதது என்று அறிவியல் உலகம் தெரிவித்துள்ளது.

தில்லி எய்ம்ஸ் இயக்குநரும், கோவிட்- 19 தேசிய மிஷன் குழுமத்தின் மருத்துவ ஆராய்ச்சித் தலைவருமான டாக்டர். ரந்தீப் குலேரியா இந்த அறிவிப்பு குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். மருத்துவ பரிசோதனையை முடித்து, தடுப்பூசியை இந்தகால எல்லைக்குள் வெளியிடுவது சாத்தியமில்லை என்று முன்னணி வைராலஜிஸ்ட்டும், வெல்கம் டிரஸ்ட் - டிபிடி அலையன்ஸ் தலைமை நிர்வாகியுமான ஷாஹீத் ஜமால் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15 காலக்கெடு அவமானகர மானது. சர்வதேச அறிவியல் சமூகம் இந்தியாவை கேலி செய்யும்.  இதுபோன்ற கூற்றுக்களால், இந்தியா நம்பகத்தன்மையை இழக்கும் என்கிறார்  இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா. ஐ.சி.எம்.ஆர் அதன் நம்பகத்தன்மை யை இழந்து வருவதாக ‘மெடிக்கல் எதிக்ஸ்’ஆசிரியரும் பொது சுகாதார நிபுணருமான அமர் ஜெஸ்னானி தெரிவித்தார்.மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்வதற்கு முன்பே ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வெளியிடப்படும் என்று அறிவிப்பது கேள்விப்படாதது என்று கல்யாணியில் உள்ள தேசிய பயோமெடிக்கல் மரபியல் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் பார்த்தா மஜும்தார் கூறினார்.

;