தேசம்

img

தில்லியில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை

புதுதில்லி:
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், விமானம்,ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன. இந்நிலையில், விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, மே 25 முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மீண்டும் துவங்க உள்ளது. 

தில்லி விமான நிலையத்தில் 380 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இங்கு 190 வருகை மற்றும் 190 வெளியேறும் நுழைவு வாயில்கள் உள்ளன. விமான நிலையத்தின் பல இடங்களில் தானியங்கி சானிடைசர்கள், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக தரைக்குறியீடுகள் மற்றும் நுழைவு வாயில்கள் ஒதுக்கீடு குறித்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தில்லி விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

;