தேசம்

img

தேர்தல் விதியை காரணம் காட்டி மாணவர்களை நீக்குவதா?

புதுதில்லி:
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும், பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள் என்பதற்காகவும் கல்வி நிலையத்திலிருந்து மாணவர்களை நீக்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. 
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மகாராஷ்ட்ரா மாநிலம், வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி அண்டார் ராஷ்ட்ரிய இந்தி விஸ்வ வித்யாலயாவில் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும், பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள் என்பதற்காகவும், தேர்தல் நடத்தை விதியைப் பயன்படுத்தி ஆறு மாணவர்களை, கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள்கிறது.தேர்தல் நடத்தை விதி என்பது தேர்தல்பிரச்சாரத்திற்கானது மட்டுமே. ஒரு வளாகத்திற்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இதனைக் காட்டி மாணவர்களைப் பல்கலைக்கழகம் பழிவாங்கியிருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும், பல்கலைக் கழகத்தின் பெயரைத் தாங்கியுள்ள காந்திஜி கற்பித்துச் சென்றுள்ள அனைத்து விழுமியங்களுக்கும் எதிரானதுமாகும்.மாணவர்கள் வெளியேற்றப்பட்ட உத்தரவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;