தேசம்

img

இபிஎப். வட்டி உயர்வு அரசாணை வெளியீடு

புதுதில்லி:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான (Employees Provident Fund) வட்டி விகிதம் 2017-2018 நிதியாண்டில் 8.55 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இது முந்தைய 5 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த வட்டி விகிதம் என்பதால், இபிஎப் வட்டி விகிதத்தை 2018-19 நிதியாண்டில் மீண்டும் 8.70 சதவிகிதம் அளவிற்காவது உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

இபிஎப் அறங்காவலர் குழு கூட்டங்களிலும் (Central Board of Trustees) இதுதொடர்பான பரிந்துரைகள் வைக்கப்பட்டன. கடைசியாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், 8.65 சதவிகிதம் என்ற அளவில் வட்டி விகிதம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இபிஎப் வட்டி விகிதம் குறித்து, கடந்த வாரம்செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறைஅமைச்சர் சந்தோஷ் கங்குவார், 2018-19 நிதியாண்டுக்கு 8.65 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார். அப்போதும்கூட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒப்புதல் வழங்காததால், அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அது இல்லை. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி மனநிலையை ஏற்படுத்தியது.இந்நிலையில், 8.65 சதவிகிதம் வட்டி வழங்குவதற்கான அரசாணையை ஒருவழியாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது.

;