தேசம்

img

கொரோனா தொற்றால் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 551 பேர் பலி

கொரோனா தொற்றால் இந்தியாவில்  24 மணிநேரத்தில் 55 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
உகானில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இந்தியாவில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8,49,553 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,34,621 பேர் குணமடைந்துள்ளனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 28,637 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதே போல 551 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

;