தேசம்

img

மத்திய அமலாக்கத்துறையின் காப்பி- பேஸ்ட் தில்லு முல்லு!

புதுதில்லி:
காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரின் ஜாமீனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில், தில்லுமுல்லு செய்து,அமலாக்கத்துறை அவமானப்பட்டுள்ளது.கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே. சிவக்குமாரை, அண்மையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு நீதிமன்றம்ஜாமீன் வழங்கியது. ஆனால், டி.கே. சிவகுமாரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் ரோகிண்டன் நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வும், அந்த மனுவை ஏற்று, வெள்ளிக்கிழமையன்று விசாரணை செய்தது.அப்போது, டி.கே. சிவக்குமார் சம்பந் தப்பட்ட வழக்கின் ஆவணங்களில் அவரை, ‘மத்திய முன்னாள் நிதியமைச்சர்’, ‘மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர்’ என்று குறிப்பிட்டிருப்பதை பார்த்து, நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், ப. சிதம்பரத்திற்கு எதிராகதாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அப்படியே காப்பியடித்து, பெயரை மட்டும் டி.கே. சிவகுமார் என்று மாற்றி, அவசர அவசரமாக அப் பீல் மனு தாக்கல் செய்திருப்பதையும் கண்டுபிடித்தார். அதுமட்டுமல்ல, ப. சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில், என்னென்ன வாதங்களை அமலாக்கத்துறை வைத்ததோ, அவை மாறுதல் இல்லாமல் அப்படியே காப்பி பேஸ்ட் (நகல்)செய்யப்பட்டிருப்பதையும் அறிந்த நீதிபதி நாரிமன், “டி.கே. சிவகுமார் எப்போது மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந் தார்?” என்று அமலாக்கத்துறையை மிகக் கடுமையாக சாடினார். “நாட்டின் குடிமகன் ஒருவரை இப்படி நடத்துவது சரியன்று,” என்றும் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தார்.

;