தேசம்

img

பிஎஸ்என்எல்: தவறான ஒப்பந்தாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- பி.ஆர் நடராஜன் கேள்வி அமைச்சர் பதில்

பிஎஸ்என்எல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர் சட்டம்  உட்பட  அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் நடைமுறைபடுத்துதல் , விதி மீறல் புகார்கள்,அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் 10-12-2019 அன்று மக்களவையில்  கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து மனிதவள மேம்பாடு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரி அழித்த பதில்கள் பின்வருமாறு
பிஎஸ்என்எல் நிர்வாகம்,  அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் பின்பற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. மேலும், இது தொடர்புடைய சட்டரீதியான விதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதற்கும், தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக தவறு செய்யும் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பிஎஸ்என்எல் நிர்வாகம், அவ்வப்போது, அதன் வட்டங்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிடுகிறது.பிஎஸ்என்எல் தனது வட்டங்களிலிருந்து, ஒப்பந்தக்காரர்களால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் தொடர்பான புகார்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போதைய மோசமான நிதி நிலைமை காரணமாக, ஒப்பந்தக்காரர்களின் நிலுவையில் உள்ள பில்களை சரியான நேரத்தில் செலுத்த பிஎஸ்என்எல் நிறுவனத்தால் முடியவில்லை என்பதால் தவறான ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

;