தேசம்

img

‘ஏத்தர் 340’ ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தம்!

புதுதில்லி:
மின்வாகன உற்பத்தியில் தேசிய அளவில் கவனம் ஈர்த்த ‘ஏத்தர்’ நிறுவனம், தனதுஆரம்ப நிலை மாடலான ‘ஏத்தர் 340’ என்றஎலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது.பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஏத்தர் எனர்ஜி’ நிறுவனம், மின்சார வாகன உற்பத்தியில் புதிய நிறுவனமாக உருவெடுத்தது. இந்நிறுவனம், ‘ஏத்தர் 340’ மற்றும் ‘450’ மாடல் மின் ஸ்கூட்டர்களை அண்மையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.தேசிய அளவிலான மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த ஸ்கூட்டர்கள்அறிமுகம் செய்யப்பட்டன. வாடிக்கையாளர்கள் மத்தியில் இவற்றுக்கு ஆதரவும் இருந்து வந்தது.இந்நிலையில், ‘ஏத்தர் 340’ மின் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாக திடீரென ஏத்தர் நிறுவனம் அறிவித்துள்ளது.

;