தேசம்

img

கொரோனாவால் தப்பிக்கும் ‘ஏர் இந்தியா’, பாரத் பெட்ரோலியம்...

புதுதில்லி:
மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான “ஏர் இந்தியா”வை தனியாருக்கு விற்பதில் கடந்த 2 ஆண்டுகளாகவே மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக சந்தையில் அவர்கள் கூவி கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றனர். முதலில், “ஏர் இந்தியா”வின் 76 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்பதாக கூறிய மோடி அரசு, பின்னர்100 சதவிகிதமும் விற்கத் தயார்என்றது; ஏர் இந்தியாவை வாங்குபவர்கள் அதன் பிராண்ட்பெயரையே மாற்றிக்கொள்ள லாம் என்றதுடன், வேறுபல சலு கைகளையும் அறிவித்தது.  கடந்த ஜனவரி 27 அன்று “ஏர் இந்தியா” விற்பனைக்கான முறைப்படியான பணிகள் தொடங்கின. ஆனால், கொரோனா குறுக்கிட்டதால், “ஏர் இந்தியா” பங்கு விற்பனைக்கான விண்ணப்ப ங்களுக்கு, ஏப்ரல் 30, ஜூன் 30 என்று அவகாசம் தள்ளிப்போனது. தற்போது அந்த அவகாசம் ஆகஸ்ட் 31  வரை மேலும் தள்ளிப் போடப்பட்டுள்ளது.“ஏர் இந்தியா” மட்டுமல்லாமல், மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோ லியத்தின் 53 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்வதற்கான கால அவகாசமும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.“ஏர் இந்தியா” ரூ. 60 ஆயிரம்கோடி கடனில் இருப்பதால் அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முதலாளிகள் யோசிக்கின்றனர். அடிமாட்டு விலைக்கு, சும்மா தூக்கிக் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்கின்றனர். எனினும், பாரத் பெட்ரோலியம் லாபத்தில் இயங்கும் நிறுவனம் என்ப தால், அதனை வாங்குவதற்கு போட்டி அதிகமிருக்கும் என்று கூறப்படுகிறது.

;