தேசம்

img

4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு!

புதுதில்லி:
‘இந்திய ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில், சீனாவின் முதலீடுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 12 மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச தொழில் ஒப்பந் தங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களை, ‘குளோபல் டேட்டா’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில், இந்தியாவிலுள்ள 24 முன்னணி ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் சீனாவைச் சேர்ந்தபெருநிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை முதலீடுசெய்துள்ளதாகவும், அலிபாபா, டென்செண்ட் ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணி இடத்தை வகிப்பதாகவும் ‘குளோபல் டேட்டா’ கூறியுள் ளது.“பேடிஎம், ஸ்னாப்டீல், பிக்பேஸ்கட், ஜொமாட்டோ” ஆகிய நான்கு நிறுவனங்களில் மட்டும் அலிபாபா நிறுவனம் மொத்தமாக 260 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. ஓலா, ஸ்விக்கி, ஹைக், ட்ரீம் 11, பைஜூஸ் ஆகிய நிறுவனங்களில் டென்செண்ட் மொத்தம் 240 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.
அலிபாபா, டென்செண்ட்போன்ற சீன பெருநிறுவனங்கள் மட்டுமன்றி, மெய்துவான் டியன்பிங், டிடி சுஷிங், போசன்,ஷுன்வே கேபிடல், ஹுல் ஹவுஸ் கேபிடல், சீனா லாட்ஜிங் குரூப், சீனா யுரேஷியாபொருளாதார ஒத்துழைப்பு நிதிஆகிய சீன முதலீட்டாளர்களும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பல கோடி டாலர் முதலீடு செய்துள்ளதாக ‘குளோபல்டேட்டா நிறுவனம்’ தெரிவித் துள்ளது.

;