தேசம்

img

4 நாளில் ரூ.1,263 கோடி முதலீடு வெளியேறியது!

புதுதில்லி:
செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும்,பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூபாய் ஆயிரத்து 263 கோடி மதிப்பிலான முதலீடுகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.மத்திய அரசின் 2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், அந்நிய முதலீடுகள் குறைந்தன. ஆனால், கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.அப்படியிருந்தும், செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டாளர்கள் 4 ஆயிரத்து 263 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். 3 ஆயிரம் கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு புதிய முதலீடு வந்தாலும், நிகரமாக ஆயிரத்து 263 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடு வெளியேறியுள்ளது.இதேபோல, முந்தைய இரண்டு மாத கணக்குகளை எடுத்தால், ஆகஸ்டில் 5 ஆயிரத்து 920 கோடியே 2 லட்சம் ரூபாய்மதிப்பிலான முதலீடுகளும், ஜூலையில் 2 ஆயிரத்து 985 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன.

;