தேசம்

பீகாரில் திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் உடைந்த புதிய பாலம் - பொது மக்கள் அதிர்ச்சி

பீகார் மாநிலத்தில் திறந்து ஒரே மாதத்தில் புதிய பாலம் உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. 
பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் பகுதியில்  ரூ263கோடி செலவில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் ஒன்று கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பீகாரில் பெய்த கனமழையால் கண்டகி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதிமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

;