தேசம்

img

மோடியின் குரலை டப்ஸ்மாஷ் செய்த லாலு!

பாட்னா, ஏப்.15-பிரதமர் மோடியின் குரலுக்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், டப்ஸ்மாஷ் (னுரளெஅயளா) செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் , ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத், தேர்தல் பரப்புரையில் புதிய செய்முறை ஒன்றைக் கையாண்டுள்ளார். பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் குரலுக்கு டப்ஸ்மாஷ் செய்து அதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலின் போது, அனைத்து இந்தியர்களின் வங்கிக்கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறிய வாக்குறுதிக்கு, லாலுபிரசாத் வாயசைத்து, மோடியை நக்கலடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பீகார் தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

;