செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

தேசம்

img

​​​​​​​ஊழல் செய்வோருக்கு சிறை....கேரள முதல்வர் பினராயி விஜயன்

 பாலா:
ஊழல் நிறைந்த மற்றொரு பாலம் கட்ட எல்டிஎப் அரசு தயாரல்ல எனவும் அதற்கு இணங்காதோர் அரசு அளிக்கும் உணவை உண்ணும் நிலை (சிறை சாப்பாடு) ஏற்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கேரள மாநிலம் கொச்சியில் யுடிஎப் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலாரி வட்டம் பாலம் மூன்றாண்டுகளில் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வல்லுநர்களும் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மெட்ரோ ரயில் மேம்பால பணிகளின் பொறியாளருமான மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் இந்த பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட வேண்டும் என தெரிவித்தார். அதன்பேரில் ரூ.18 கோடியில் புதிய பாலம் கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாலம் கட்டுவதில்நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரித்த காவல்துறை யினர் சில அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.     இதை சுட்டிக்காட்டியே முதல்வர் ஊழலுக்கு எதிரானஎல்டிஎப் அரசின் உறுதியான நிலைபாட்டை தெரிவித்துள்ளார்.

பாலா சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அங்கு வெள்ளியன்று பிரச்சாரம் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு திங்களன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள்  தொகுதியின் பல்வேறு இடங்களில் பினராயி விஜயன் பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். அப்போது, முந்தைய யுடிஎப் ஆட்சி காலத்தில் நடந்த பெரும் முறைகேடுகளுக்கு சாட்சியமாக பாலாரிவட்டம் பாலம் திகழ்வதாக கூறினார். பாலத்தின் பெயரால் பணத்தை அள்ளியர்வர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊழல் நிறைந்த பஞ்சவடி பாலங்கள்  அல்ல நல்ல வலுவும், ஆயுளும் உள்ள பாலங்களையே எல்டிஎப் அரசு அமைத்து வருகிறது. எதிர்கட்சி தலைவர் தங்களது ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளை மறைக்க ‘கிப்பி’ என்கிற கேரள அரசின் நிதி நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறாது என தெரிவித்தார்.

;