தேசம்

img

பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

சண்டிகர்:
கல்வியில் மதத்தைப் புகுத்தும் முயற்சியை மத்திய பாஜக அரசும், மாநில பாஜகஅரசுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த வகையில், ஹரியானா மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில், பகவத்கீதை சேர்க்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.ஹரியானாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மனோகர் லால் கட்டார், “பகவத் கீதை ஒன்றும் மத நூல் அல்ல; அது வாழ்க்கையின் சாராம்சங்களை விளக்கும் நூல்”என்று விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். “பள்ளிக் குழந்தைகளின் பாடத் திட்டத்தில், இவை அவர்களுக்கு புரியும்படி சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்காக இலகுவான ஸ்லோகங்கள் மாநிலத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்” என்றும் கட்டார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹரியானாவைத் தொடர்ந்து, இந்திய அளவிலும் பகவத் கீதைவிரிவுபடுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.தமிழகத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடமாக்கும் முயற்சி அண்மையில் நடந்தது. மக்களின்எதிர்ப்பால் பின்னர் அது முறியடிக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது.

;