திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தேசம்

img

ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு பாதிப்பு...  ஆயிரம் பேர் பலி.... அமெரிக்காவை மிரட்டும் கொரோனா...   

நியூயார்க் 
உலகின் கொரோனா மையமாக உள்ள அமெரிக்காவில் வேகம் கணிக்க முடியாத அளவிற்கு தாறுமாறாக உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் புதிய  உச்சமாக 71,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 36.16 லட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று (வியாழன்) ஒரே நாளில் 1,001 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு 1.40 லட்சத்தை தாண்டியுள்ளது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இதுவரை 16.45 லட்சம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 

தொடக்கத்தில் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்த நியூயார்க் மாகாணம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், டெக்சாஸ், கலிபோர்னியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த 3 மாகாணங்களில் தினசரி பாதிப்பு 9 தலா ஆயிரத்துக்கு மேல் இருக்கும். மற்ற மாகாணங்களிலும் கொரோனா சீரான வேகத்தில் பரவி வருவதால் அதனை பற்றி கண்டுகொள்ளாமல் அமெரிக்க அரசு சீனாவுடன் எப்படி சண்டை போடுவது என்ற நோக்கத்தில் தான் செயலாற்றி வருகிறது.  
 

;