தேசம்

img

தொழில்துறையின் ஆணிவேரான மின்சாரத்தை தனியார்மயமாக்குவது ஆபத்து

தபன்சென் எச்சரிக்கை

திருநெல்வேலி, ஆக.18- தொழில்துறையின் ஆணி வேரான மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருமானம் ஈட்டிவரு கின்றன.தென் மாநிலங்களில் மின்சாரம் இருமடங்கு பணம் கொடுத்து அரசால் வாங்கப்பட்டு வருகிறது என சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் குற்றம் சாட்டினார். நெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐ டியு) மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று 2 ஆம் நாள் மாநாடு நடைபெற்றது. இதில் சிஐ டியு பொதுச் செயலாளர் தபன் சென், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணியன், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதனிடையே செய்தியாளர் களை சந்தித்த தபன்சென் கூறிய தாவது:

மத்திய அரசு மின்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தனியார்மய மாக்கும் முயற்சியை எதிர்த்து தொமுச உள்ளிட்ட தொழிற்சங் கங்களுடன் இணைந்து போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. பாஜக அரசின் தவறான கொள்கையால் நாட்டின் உற்பத்தி  மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் எழுந்துள்ளது. தொழில் துறையின் ஆணிவேரான மின்சாரத்தை தென்னிந்தியாவில் இரு மடங்கு பணம் கொடுத்து பெறக் கூடிய சூழல் உள்ளது. தனியார் நிறுவனங்கள் மின்சா ரத்தை விற்பனை செய்து பன் மடங்கு பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் மின்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதனை விடுத்து தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் தொழிலாளர் களும் பொதுமக்களும் தெருவில் இறங்கி போராடக்கூடிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். எஸ்.எஸ்.சுப்பிரமணியம் கூறுகையில், “மின்வாரியத்தில் 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் கடத்துகிறது. 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நசுக்கப் பார்க்கி றது. காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தப்படும்” என கூறினார். பேட்டியின்போது சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் உடன் இருந்தார்.

தீர்மானங்கள்

முன்னதாக, மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு: பதினாறாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக அரசு நூறு நாள் திட்டத்தை அறிவித்து அதை அமலாக்க புயல்வேக நடவடிக்கை எடுத்து வருகிறது. லாபம் தரும் 24 பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை ரூ.90 ஆயிரம் லட் சம் கோடிக்கு விற்பனை செய்வ தற்கான ஒப்பந்தப் புள்ளி கோரி யுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களை சீரழிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வரு கிறது.  மின்துறையில் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளை ஊக்கு விக்கிற வகையில் பல்வேறு சலு கைகளை வாரி வழங்கி வருகிறது. அதில் ஒரு அம்சமாக மின் உற் பத்தியாளர்களுக்கு மின் விநி யோக நிறுவனங்கள் பெறுகின்ற மின்சாரத்திற்கான தொகையை செலுத்த தவறும்போது அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கி லிருந்து மின் உற்பத்தியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று மின்சார வாரியத்தின் கஜானாவை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திறந்து விடுகிறது. 

ஏழாவது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 என நிர்ணயம் செய்து உத்தரவாக வும் வெளிவந்து அமலாகும் தரு ணத்தில் மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியம் வெறும் ரூ.4628 என அறி வித்து உழைப்பாளி மக்களின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத் தில் மத்திய அரசு மேற்கொண் டுள்ள இந்திய உழைப்பாளி மக்க ளின் உதிரத்தை உறிஞ்சும் செயல் களுக்கு எதிராக இந்திய நாட்டு உழைப்பாளி மக்கள் கடுமையான போராட்டக் களங்களில் இறங்கும் போது தமிழக மின்வாரிய ஊழி யர்களும் அந்த போராட்ட ஜுவா லையில் தங்களை இணைத்துக் கொள்ள மாநாடு அழைப்பு விடுக்கிறது.  மேலும் தமிழக மின்வாரிய மறு சீரமைப்பைக் கைவிட, மின்விநி யோக சட்டதிருத்த மசோதா-2018 கைவிட, மின்வாரிய ஊழியர் களுக்கு ஊதிய உயர்வை அளித்திட, தமிழக மின் நுகர்வோ ருக்கு தரமான மின்சாரம் தடை யில்லா மின்சாரம் வழங்கிட உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்க, மின்சாரம், போக்கு வரத்து, ரயில்வே, பிஎஸ்என்எல், வங்கி, காப்பீடு உள்ளிட்டவை பொதுத்துறைகளாகவே நீடித்திட, புதிய பென்சன் திட்டத்தை கை விட, மின்வாரியத்தில் காலியாக உள்ள 40ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், அடை யாள அட்டை, நிரந்தரம் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

மாநாட்டை வாழ்த்தி இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (இஇஎப்ஐ) பொதுச் செயலாளர் பிரசாந்தோ நந்தி சவுத்ரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ்.ஜெகதீசன் ஆகியோர் பேசி னர்.  மாலையில் நடந்த சிஐடியு 50 ஆண்டுகால போராட்ட வரலாறு என்னும் கருத்தரங்கத்திற்கு தி.ஜெய்சங்கர் தலைமை வகித் தார். சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் ஆகி யோர் பேசினர்.

இன்று பேரணி

இன்று (திங்கட்கிழமை) மாநாட்டில் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெறு கிறது. சி.ஐ.டி.யு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்று கிறார். மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் கணேசா திருமண மண்டபத்தில் இருந்து பேரணி புறப்படும். தொடர்ந்து பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். வரவேற்புக் குழு செயலாளர் வண்ணமுத்து வரவேற்று பேசுகிறார்.

பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஆர்.சிங்காரவேலு, ஆர்.கருமலையான், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன், கே.அருள்செல்வன், எம்.தனலெட்சுமி, ஆர்.மோகன், எம்.பீர்முகம்மது ஆகியோர் பேசுகின்றனர்.

நெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 2 ஆம் நாள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசினர். அருகில் சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் மற்றும் சிஐடியு தலைவர்கள் உள்ளனர்.
 

;