தேசம்

img

உத்தரகண்ட் வந்தால் பசுமை வரி கட்ட வேண்டும்

ஹரித்துவார்:
இமயத்தின் அடிவாரத்தில் இருக்கும், உத்தரகண்ட் மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை யும், பழமை வாய்ந்த கோயில்களையும் கொண்டிருப்பதாகும். இதனால், இந்தி யாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் உத்தரகண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்து போகின்றனர்.இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள், பசுமை வரி செலுத்த வேண்டும் என்று, இங்குள்ள பாஜக அரசு புதிய உத்தரவுஒன்றைப் பிறப்பித்துள்ளது.சுற்றுலா வரும் பயணிகளால், உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பெரு மளவில் மாசடைவதாகவும், எனவே, மாசுபாட்டை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்த வரி விதிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழல் பாது காப்புத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவுக்கு, மாநில பாஜக  அர சும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.  இதனால் விரைவிலேயே இந்த  வரிவிதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

;