தேசம்

img

இன்று காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் 

தில்லி: 
சமீபத்தில் நிறைவுபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 90 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவியிலிருந்து விலக முன்வந்தார்.

ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதனை அதிரடியாக நிராகரித்துவிட்டு கட்சியை மறுசீரமைப்பதற்கான முழு அதிகாரத்தையும் ராகுலுக்கு வழங்கியது. இந்நிலையில்,புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டம் சனியன்று நடைபெறுகிறது.கட்சியின் மக்களவை குழு தலைவராக மணீஷ் திவாரி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

;