செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

தேசம்

img

ஊழல் புகார்களை வெளியிட மறுக்கும் மோடி அரசு?

புதுதில்லி:
மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங் களை பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடந்த 2017 ஆகஸ்டில் பிரதமர் அலுவல கத்தில், மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களைத் தருமாறு கேட்டி ருந்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில், சஞ்சீவ் சதுர்வேதி முறையிட் டார். இதனை கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி விசாரித்த ஆணையம், மத்திய அமைச் சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை வழங்க பிரத மர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் குறிப்பிட்ட விவரங்களை பிரதமர் அலு வலகம் வழங்கவில்லை.

இதனால், சஞ்சீவ் சதுர்வேதி மீண்டும் மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த தகவல் ஆணை யர் சுதிர் பார்கவா, கடந்தஜூலை 1-ஆம் தேதி புதிய உத்தரவைப் பிறப்பித்தார். அதில், “பிரதமர் அலுவல கம் பதில் அளிக்க மறுப்பது தவறானது. மனுதாரர் கோ ரிய விவரங்களை வழங்க வேண்டும்” என்று மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

;