வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தேசம்

img

மீண்டும் உயரத் துவங்கிய பெட்ரோல் - டீசல் விலை

புதுதில்லி:

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த அடுத்த நாளிலேயே பெட்ரோல் - டீசல் விலை உயரத்துவங்கி விட்டது.


கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதிதுவங்கிய மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைப்பெற்று மே 19-ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இந்தக் காலத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பெரிய அளவிற்கு உயர்ந்து விடாமல் மோடி அரசு பார்த்துக் கொண்டது.விலை உயர்ந்தால், அது தேர்தலில் தங்களுக்கு எதிராக மக்களைத் திருப்பி விடும் என்ற பயமே அதற்குக் காரணம்.


ஆனால், தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. திங்கட்கிழமையன்று பெட்ரோல் விலை 10 காசுகள் வரையிலும், டீசல் விலை 16 காசுகள் வரையிலும் உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் நிறுவனத்தின் விலை நிலவரங்களின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71 ரூபாய் 12 காசுகளாகவும், டீசல் விலை 66 ரூபாய்11 காசுகளாகவும் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 72.98 டாலராக உள்ளது.

;