தேசம்

img

செய்தித் துளிகள்.... (ஒருவரியில் தேசிய செய்திகள்)

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை செப்டம்பர் 30க்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘ஆர்சனிகம் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்து கொரோனாவுக்கு எதிராக கேடயம்போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுச்சேரி தற்போது சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி தெலுங்கானா மாநிலத்தில் ஐடி ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.28லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் குர்கும்ப் எனும் இடத்தில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. 10க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணை க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சென்னை அயனாவரத்தில் தனியார் பள்ளி யில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிபிரியதர்ஷினி, நாள்பட்ட காசநோயால் இடுப்புக்குகீழ்உடல் உறுப்புக்கள் செயலிழந்துள்ள நிலையிலும் பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - தில்லி ராஜதானி சிறப்பு ரயில் மற்றும் ஜுன் முதல் இயக்கப்படவுள்ள 200சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு கவுண்ட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்பதிவு கவுண்டருக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால் அங்கு வந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. வியாழனன்று ஒரே நாளில் 2345 பேர் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த எண்ணிக்கை 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது. எனவே மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ஜுன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு களை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு பல்கலைக்கழகத்தில் முழு நேரமாகபட்டப்படிப்பு பயிலும் மாணவர் அதே பல்கலைக் கழகம் அல்லது வேறு பல்கலைக்கழகத்தில் மற்றொருபட்டப்படிப்பில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து மே 25 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் அதற்கானபுக்கிங் துவங்கியுள்ளது. எனினும் ஜுன் 1 முதல்தான் அதிகமாக விமானங்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கிந்தியா மற்றும் தெற்கு வங்கதேசத்தை மிகக்கடுமையாக தாக்கியுள்ள ஆம்பன் புயல், கடந்த 20 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தை சூறையாடிய அதிபயங்கரப் புயலாக கருதப்படும் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இந்தியாவில் மே 8 வரையிலான 6 வார கால கொரோனா ஊரடங்கு சமயத்தில், நாடு முழுவதும் உள்ள வங்கிக் கணக்குகளில் ரூ.2.8லட்சம் கோடி அளவிற்கு மக்களின் சேமிப்புப் பணம்அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. இதே காலத்தில் வங்கி அளிக்கும் கடன் தொகை ரூ.1.2லட்சம் கோடி அளவிற்கு குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி ஜும்மா மசூதிக்கு அருகே தில்லி காவல்துறையினர் வெள்ளியன்று திடீரென கொடி அணிவகுப்பு நடத்தினர். ரமலான் நோன்புஇருக்கும் முஸ்லிம் மக்கள் அவரவர் இல்லங்களி லேயே தொழுகை நடத்துமாறு ஒலிபெருக்கி வாயிலாக வலியுறுத்தினர்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆவலுடன் காத்திருக்கின்றனர். தாராவியில் சுமார் 8லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்திக்காக தமிழகத்தின் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் ஈடுபடுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தப் பணிகள் நடக்கவில்லை. இதனால் மண்பாண்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகில் உள்ள கீசுகொண்டா பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் அவர்களது உடல்களை மீட்டனர். இவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. விசாரணை நடந்து வருகிறது.

;