தேசம்

img

சமஸ்கிருத நிறுவனங்களுக்கு தேசிய பல்கலை. அந்தஸ்து!

புதுதில்லி:
தேசிய அளவில் 3 சம்ஸ்கிருத கல்வி நிலையங்களுக்கு, தேசிய பல்கலைக்கழகங்கள் என்ற அந்தஸ்து வழங்க மோடி அரசு முடிவுசெய்துள்ளது. நாடு முழுவதிலும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நடத்தும் சம்ஸ்கிருதக் கல்வி நிறுவனங்கள் மொத்தம் 17 உள்ளன. தில்லியின் ராஷ்டிரிய சன்ஸ்கிருதி சன்ஸ்தான் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யாபீட், ஆந்திரா வின் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யா பீடா, மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜை
னியில் உள்ள மகரிஷி சண்டிபாணிராஷ்டிரிய வேதா வித்யாபிரதீஷ் தான் ஆகிய 4 கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையே நடத்தி வரு கிறது. இவற்றில் முதல் மூன்று நிறுவனங்களைத்தான் தேசியப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு, மத்திய நிதியமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அமைப்புகள் அனுமதி வழங்கியுள்ளன.அடுத்தகட்டமாக இந்த முன்மொ ழிவு சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அங்கும் அனுமதி கிடைத்தவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, 2020கல்வியாண்டிலேயே, பல்கலைக் கழகங்கள் செயல்பாட்டு வரும் என்றும் மோடி அரசு கூறியுள்ளது.தமிழுக்காக, மத்திய அரசுநடத்தும் ஒரே அமைப்பாகசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது. இதற்கான இயக்குநரைக் கூட மோடி அரசு நிரப்பாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;