தேசம்

img

மோடியின் 100 நாட்களில் ரூ.13 லட்சம் கோடி நஷ்டம்!

புதுதில்லி:
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற கடந்த 100 நாட்களில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் 13 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந் தித்திருப்பதாக கூறப்படுகிறது.நரேந்திர மோடி கடந்த 2019 மே 30ஆம் தேதி, இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அன்றைய நாளில், மும்பை பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகள் மதிப்பு 1 கோடியே 54 லட்சத்து 43 ஆயிரத்து 363 கோடியே 95 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால், இதுவே செப்டம்பர் 9-ஆம் தேதி நிலவரப்படி, 13 லட்சத்து28 ஆயிரத்து 47 கோடியே 56 லட்சம்ரூபாய் சரிந்து, 1 கோடியே 41 லட்சத்து15 ஆயிரத்து 316 கோடியே 39 லட்சம்ரூபாயாக குறைந்துள்ளது.மே 30, 2019 முதல் மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸூம் 2,687 புள்ளிகள் சறுக்கியுள்ளது. 

அதாவது, மோடியின் 100 நாள்ஆட்சியில் 6.74 சதவிகிதம் குறைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிப்டி 943 புள்ளிகள் வழுக்கி7.89 சதவிகிதம் அளவிற்கு சரிந் துள்ளது.ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்தநிலை, மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி குறைவு ஆகியவையே பங்குச் சந்தைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், 2018-19 நிதி ஆண்டின் முதல் காலாண்டிலேயே ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்த்ததைக் விட, 5 சதவிகிதம் என்று குறைந்ததும், முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடித்ததன் பின்னணியில் உள்ளதாக, ‘ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அருண் துக்ரல் குறிப்பிட்டுள்ளார்.

;