தேசம்

img

ஜி20 உச்சி மாநாட்டில் மோடி - டிரம்ப் சந்திப்பு

புதுதில்லி:
ஜி20 உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிரதமர் மோடியும் வர்த்தக விவகாரம் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜி20 உச்சி மாநாடானது ஜப்பானின் ஒசாகாவில் வரும் 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளச் செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க டிரம்ப்பை சந்தித்துப் பேசுகிறார். அதேசமயத்தில், இந்தியா - அமெரிக்கா- ஜப்பான் நாட்டுத் தலைவர்களின் பேச்சு வார்த்தையும் நடைபெற உள்ளது. டிரம்ப் உடனான சந்திப்பின் போது, இருநாடுகள் இடையேயான வர்த்தக 
விவகாரம் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார் க்கப்படுகிறது. இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா பறித்தது மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேசக் கூடும் என்று கூறப்படுகிறது. 
 

;