திங்கள், ஆகஸ்ட் 10, 2020

தேசம்

img

ஜாமியா மிலியா பல்கலைக் கழக போராட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தில்லியில் மாணவர்கள் இடைவிடாத எழுச்சி மிகு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். குடியரசு தினத்தன்றும், தில்லியின் பல்வேறு பல்கலைக் கழக வாயில்களில் மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜாமியா மிலியா பல்கலைக் கழக வாயிலில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவர் பேரவை தலைவர்களுடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்று தமது ஆதரவை தெரிவித்தார். ஜவஹர் லால் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷ், இந்திய மாணவர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர்கள் தினித், தீப்ஷிதா, அகில இந்திய செயற்குழு உறுப்பினர் நிதீஷ் நாராயண், ஜேஎன்யு கிளைத் தலைவர்கள் லோகேந்தர், அக்சத் சேத், பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;