தேசம்

img

அதீத வறுமை கொண்ட நாடுகள் பட்டியல்... நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா!

புதுதில்லி:
உலகில் மிகமோசமான வறுமைநிலவும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-ஆவது இடத்தில் இந்தியா இருப்பது தெரியவந்துள்ளது.‘வேர்ல்ட் பாவர்ட்டி கிளாக்’ (World Poverty Clock) என்றஅமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி ‘தி ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸ்’ (The Spectator Index) என்ற ட்விட்டர் பக்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், உலகில் மோசமான வறுமை நிலவும் நாடுகள் பட்டியலில் நைஜீரியாவுக்கு முதல் இடம்வழங்கப்பட்டுள்ளது. இங்கு அதீதவறுமையால் வாடுவோர் எண் ணிக்கை 15.7 சதவிகிதம் என்றும், காங்கோவில் 10 சதவிகித மக்கள்அதீத வறுமையால் வாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இவ்விரு நாடுகளுக்கும் அடுத்த மோசமான இடத்தில், இந்தியா இடம்பெற் றுள்ளது. இந்தியாவில் 8 சதவிகிதம்பேர், மிகமோசமான வறுமையில் வாடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.அடுத்தடுத்த இடங்களில் எத்தியோப்பியா (4.6 சதவிகிதம்); தான்சானியா (3 சதவிகிதம்); வங்கதேசம்(2.3 சதவிகிதம்); தென்னாப்பிரிக்கா (2.3 சதவிகிதம்); இந்தோனேசியா (2.1 சதவிகிதம்); ஏமன் (1.6 சதவிகிதம்); பிரேசில் (1.1 சதவிகிதம்); சீனா(0.9 சதவிகிதம்); பாகிஸ்தான் (0.3 சதவிகிதம்); அமெரிக்கா (0.3 சதவிகிதம்); மெக்சிகோ (0.35 சதவிகிதம்) என நாடுகள் வரிசைப்படுத்தப் பட்டு உள்ளன.

;