ஞாயிறு, ஆகஸ்ட் 9, 2020

தேசம்

img

கோவில், மசூதி என்று பேசியே வீணாகும் இந்தியா!

புதுதில்லி:
சீனா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, இந்தியர்களாகிய நாம், கோவில், மசூதி என்று பேசி, காலத்தைவீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்று கடற்படை முன்னாள் தளபதி அருண் பிரகாஷ் கூறியுள்ளார்.தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையிலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.“செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் என்று, சீனா தொழில்நுட்ப பாய்ச்சலில் உள்ளது. ஆனால், நாம் கோவில், மசூதி என்று பேசிக்கொண்டிருந்தால் அது நிச்சயமாக நேரத்தைவீணாக்குவதே ஆகும்” என்று அருண் குறிப்பிட்டுள்ளார்.மறுபுறத்தில் ‘370-ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஜம்மு - காஷ்மீர் பிராந்தியத்தில் அமைதியையும் வளர்ச்சியும் கொண்டுவரும்’ என்று நம்புவதாகவும் அருண் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அருண் பிரகாஷ், கடந்த 2004 முதல் 2006 வரை கடற்படைத் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

;