தேசம்

img

காஷ்மீர் பிரச்சனையில் சிபிஎம் நிலைப்பாடு: முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி புகழாரம்

புதுதில்லி;
ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்களவையில் ஆட்சேபணை  எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி டுவிட்டரில் புகழ்ந்துள்ளார். அதிகாரப்பூர்வமான தனது டுவீட்டில் மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது: அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கதையளந்த மத்திய அரசு, காஷ்மீர் மக்களின் கண்ணை மூடி கோழைகளைப்போல ஜனநாயக மீறலில் ஈடுபட்டது.

ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் வலுவான எதிர்ப்பை சிபிஎம் இரு சபைகளிலும் எழுப்பியது. மசோதா மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது சிபிஎம் தலைவர் டி.கே.ரங்கராஜன் மசோதாவை கடுமையாக விமர்சித்தார். ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என்று ரங்கராஜன் கூறினார். பாஜக அரசு ஜனநாயகத்தை பலாத்காரம் செய்துள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் ரங்கராஜன் மாநிலங்களவையில் கூறினார். இப்பிரச்சனையில் தொடர்ச்சியான எதிர்ப்பை சிபிஎம் தெரிவித்துள்ளது. அரசியல் சட்டம் 370 ரத்துக்கு எதிராக இன்று நாடுதழுவிய போராட்டத்துக்கு சிபிஎம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வாறு மெகபூபா முப்தி தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

;