தேசம்

img

சாதி மறுப்புத் திருமணங்களே சமூகத்திற்குத் தேவை ... காதல் திருமணங்களுக்கு ஒருபோதும் எதிராக வர மாட்டோம்

புதுதில்லி:
சாதி மறுப்புத் திருமணங்கள் சமூகத்திற்கு மிகவும் தேவையானது என்றும், சட்டப்படி நடைபெற்ற காதல்திருமணங்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டோம் என் றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தஇந்து மதப்பெண் ஒருவர் முஸ்லிம்மத இளைஞரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்காக இளைஞர் தன்னை இந்துவாகவும் மதமாற்றம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால், இந்தத் திருமணத்தை எதிர்த்து, பெண்ணின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். சத்தீஸ்கர் நீதிமன் றமோ, “காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, சேர்ந்து வாழத் தடை விதிக்க முடியாது” என்று கூறிவிட்டது.எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து,பெண்ணின் பெற்றோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்பு இந்த மனுவிசாரணைக்கு வந்தது. அப்போதுதான், காதல் திருமணத்திற்கு எதி
ராக நடந்துகொள்ள மாட்டோம் என்றுநீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.“நாங்கள் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்லர். இந்து - முஸ்லிம் திருமணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இருவரும் சட்டத்துக்கு உட்பட்டுத் திருமணம் செய்து கொண்டால் அதில், எந்தப் பிரச்சனையும் இல்லை. சாதி- மத மறுப்புத் திருமணங்கள்மூலம் சாதியப் பாகுபாடுகள் நீக்கப் பட்டால் நல்லதுதான். இதேபோல, உயர் சாதியைச் சேர்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது சிறப்பானது, சமூகத்துக்கு நல் லது. ஆனால் திருமணம் செய்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாகப் பெண்களின் எதிர்காலம் குறித்து கவலை இருக்கிறது.அதனால்தான் அவர்களது எதிர்காலப் பாதுகாப்பு உறுதிப்படுத் தப்பட வேண்டிய தேவையுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய இருவரது திருமணம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தப் போவதில்லை. பெண்ணின் விருப்பத்தை மட்டுமே உறுதிப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.எனினும், இந்த வழக்கு தொடர் பாக சத்தீஸ்கர் மாநில அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

;