தேசம்

img

பாரத் ரயில் துவக்க விழாவுக்கு ரூ. 52 லட்சம் வீணடிப்பு

புதுதில்லி:

சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப் பட்ட ‘ட்ரெயின் 18’ என்ற விரைவு ரயிலுக்கு, ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டு, தில்லி - வாரணாசி இடையே, கடந்த பிப்ரவரி மாதம் இயக்கப்பட்டது.


மணிக்கு, அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்ட (தற்போது 80 கி.மீ. வேகத்தில்தான் செல்கிறது) வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கிவைத்தார். புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்ட மறுநாளே, புதிய ரயில் துவக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்படி மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ தனது முதல் பயணத்தின் போதே தொழில்நுட்ப கோளாறால் பாதி வழியில் நின்றுபோனது வேறு கதை.


ஆனால், ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு, 52 லட்சத்து 18 ஆயிரத்து 400 ரூபாய் அளவிற்கு மக்களின் வரிப்பணம் மிகவும் ஆடம்பரமான முறையில் செலவிடப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. துவக்க விழாவிற்கான கூடாரம் அமைப்பதற்கும், வாட்டர் ப்ரூப் பந்தல்கள் அமைக்கவும், தொலைத் தொடர்புகளுக்கான சிக்னல்களை பெறுவதற்காக மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை ரயில்வே வாரி இறைத்துள்ளது.

;