தேசம்

img

ராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்

புதுதில்லி:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, அனில் அம்பானி திடீரென திரும்பப் பெற்றுள்ளார்.


பிரான்ஸ் நாட்டின்,டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, இந்திய அரசு ரூ. 58 ஆயிரம் கோடிக்கு, ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதில் பெரும் ஊழல்

நடந்திருப்பதாகவும், இதில்,ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் தொடர்பு உள்ளது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். 


ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி செய்துள்ளமுறைகேடு குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ‘நேசனல் ஹெரால்ட்’ பத்திரிக்கையும் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.இதையடுத்து, தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக, ராகுல் காந்தி மற்றும் நேசனல் ஹெரால்ட் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அனில் அம்பானி வழக்கு தொடர்ந்தார். 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடும் கோரியிருந்தார்.இந்நிலையிலேயே, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் சூழலில், திடீர் திருப்பமாக ராகுல் மற்றும் நேசனல் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற்றுள்ளார்.

;