தேசம்

img

3 லட்சம் தந்து விட்டு 30 லட்சம் என்று விளம்பரம்

ஆக்ரா:
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச்சேர்ந்தவர் லலிதா குமாரி. 17 வயது வளரிளம் பெண்ணான இவர், கடந்த 2 ஆண்டுகளாக ‘அப்ளாஸ்டிக் ஆஸ்துமா’ எனும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது சிகிச்சைக்கு ரூ. 10 லட்சம் பணம் தேவைப்பட்ட நிலையில், அவர்கள் உதவி கேட்டு, பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த 2 மாதங்களில், பிரதமரின் நிதியுதவித் திட்டத்திலிருந்து, லலிதா குமாரியின் மருத்துவச் சிகிச்சைக்கு, ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக உத்தரவு கிடைத்துள்ளது. 
இதையடுத்து, கூடுதலாக இன்னும்ரூ. 7 லட்சம் வேண்டும் என்பதால், அவர்கள், இந்தமுறை உத்தரப்பிரதேச மாநில முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், லலிதா குமாரியின் மனுவை உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டது.விண்ணப்பதாரர் லலிதா குமாரிக்கு, ஏற்கெனவே பிரதமர் அலுவலகம் ரூ. 30 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதால், மேலும் நிதியுதவி வழங்க முடியாது என்றுஉத்தரப்பிரதேச காரணத்தையும் கூறியுள்ளது.இதனால், லலிதா குமாரியும், அவரதுபெற்றோரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதமர் அலுவலகம் வழங்கியது ரூ. 3 லட்சம்தான் என்று எவ்வளவோஎடுத்துக்கூறி மன்றாடியுள்ளனர். ஆனால்,பிரதமர் அலுவலகம் ஊடகங்களுக்குஅளித்த செய்திக்குறிப்பிலும், விளம்பரத்திலும் ரூ. 30 லட்சம் என்றே குறிப்பிட்டிருப்பதும், பாஜக-வினரும் அதனை அப்படியே சமூகவலைத்தளங்களில் பரப்பிவிட்டதும் தெரிய வந்துள்ளது.பின்னர், ஒருவழியாக பிரதமர் அலுவலகத்தின் தரப்பில்தான் தவறு நிகழ்ந்துள்ளது என்பதை லலிதா குமாரியின் குடும்பம் போராடி நிரூபித்த பின்னர்,லக்னோ மருத்துவமனையில் லலிதாகுமாரிக்கு சிகிச்சை வழங்க உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

;