தேசம்

img

‘மான்’ கி பாத்.. ‘மவுன்’ கி பாத்..? ஆகிவிடக் கூடாது...!

திருவனந்தபுரம்:
அறிவுஜீவிகள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தவிவகாரம் தன்னை மிகுந்த கலக்கமடைய செய்துள்ளது என்று காங்கிரஸ்நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு 2 பக்க கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். அதில், 2016-இல் பிரதமர் மோடி அமெரிக்காவில் உரையாற்றியபோது, அரசியலமைப்பை ‘புனிதப் புத்தகம்’என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்தியுள்ள சசிதரூர், அந்த புனிதப் புத்தகத்தின் சட்டப்பிரிவு 19-இல் குறிப்பிட் டுள்ள அரசியலமைப்பு கொள்கையை மோடி உறுதிப்படுத்த வேண்டும்; பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.“இந்திய குடிமக்கள் என்ற வகையில், நாங்கள் ஒவ்வொருவரும் தேசியமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை அச்சமின்றி பிரதமராகிய உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறோம். கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமையை நீங்களும் ஆதரிப்பீர்கள் என்று நாங்கள்நம்ப விரும்புகிறோம்; கருத்து வேறுபாடு இல்லாத ஜனநாயகம் இல்லை; உங்களைப் பற்றி விமர்சிக்கும் அல் லது எதிர்க்கும் கருத்துக்களைக் கொண்டவர்கள், எதிரிகளாகவோ அல்லது தேச விரோதிகளாகவோ கருதப்படக்கூடாது; ‘மனதின் குரல்’நிகழ்ச்சி நடத்தும் பிரதமர் குரல்களை மவுனமாக்கி விடக் கூடாது (Mann ki baat... Moun ki baat..) என்றும் சசிதரூர் கூறியுள்ளார்.

;