திங்கள், ஆகஸ்ட் 10, 2020

தேசம்

img

26.26 லட்சம் மாணவர்களுக்கு 9 வகை உணவுப்பொருட்கள்

திருவனந்தபுரம்:
அரிசியுடன் ஒன்பது பொருட்கள் அடங்கிய உணவுப் பைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 26,26,763 மாணவர்களுக்கு இந்த வாரத்தில் விநியோகிக்கப்படுகிறது. ரூ.81.37 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் பயனடைவார்கள். கோவிட்-19 நோய் பரவலைத் தொடர்ந்து முன்நிலைமுதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுப்பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது. சப்ளைக்கோ மூலம் பள்ளிகளுக்கு இந்த உணவுப் பைகள் வழங்கப்படும். மதிய உணவு குழு, பி.டி.ஏ, எஸ்.எம்.சி மற்றும் தாய் பி.டி.ஏ உடன் இணைந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி இவை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

;