திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தேசம்

img

மதுரையில் வரும் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு  அமல்

மதுரையில் வரும் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) மட்டும் புதிதாக 280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை 3703 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 51 பேர் பலியாகி உள்ளனர்.  இந்நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரையில் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு , மதுரை கிழக்கு,  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

;